’என்னோட கிட்னிய திருப்பிக் கொடு, இல்லனா ரூ.12 கோடி நஷ்டஈடு தா’ - டைவர்ஸ் கேட்ட மனைவிக்கு கணவர் செக்!

அமெரிக்காவில் மனைவி விவாகரத்து கேட்டதால், தாம் தானமாக வழங்கிய கிட்னியைத் திரும்ப வழங்குமாறு கோரி கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
model image
model imagefreepik
Published on

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மருத்துவர், ரிச்சர்ட் பாடிஸ்டா. நாசாவ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் அறுவைசிகிச்சை நிபுணரான இவர், கடந்த 1990ஆம் ஆண்டு மருத்துவரான டோமினிக் பார்பரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2000வது ஆண்டு, பார்பராவிற்கு கிட்னிகள் செயல் இழந்தன. இதையடுத்து, அவருக்கு இரண்டு முறை செய்த உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் 3வது முறையாக கிட்னி மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். உடனடியாக வேறு கிட்னி கிடைக்காததால் ரிச்சர்ட் தனது மனைவிக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒப்புக்கொண்டார்.

model image
model imagefreepik

இதையடுத்து கார்னல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு ரிச்சர்ட்டின் கிட்னி தானமாகப் பெறப்பட்டு, பார்பராவுக்கு பொருத்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பார்பரா ’தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும்’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால் ரிச்சர்ட் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர், தனது மனைவி விவாகரத்துக்கு கோருவதால் அவருக்கு விவாகரத்து அளிக்க தாம் தயாராக இருக்கிறேன். அதேநேரத்தில், அவருக்கு, தாம் தானமாக வழங்கிய சிறுநீரகத்தைத் தனக்கு திரும்ப வழங்க வேண்டும். இல்லை என்றால் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.12,43,51,875) இழப்பீடாக தனக்கு வழங்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் பதில் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, ,அமெரிக்காவில் உறுப்பு தானத்திற்காக நிலுவையில் உள்ள சட்டங்களின்படி, ஒருவர் மற்றொருவருக்கு உடல் உறுப்புகளை தானமாக மட்டுமே வழங்க முடியும்.

model image
model imagefreepik

அதற்காக இழப்பீட்டுத் தொகை அல்லது அந்த உறுப்புகளுக்கான தொகையை நிர்ணயித்துப் பெற முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரிச்சர்ட் தனது மனைவிக்கு சிறுநீரகம் வழங்கியது தானம்தானே தவிர, அதற்காக இழப்பீடு தொகை நிர்ணயிக்க முடியாது எனக் கூறி ரிச்சர்ட்டின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com