அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப கண்காட்சியில் அமேகா என பெயரிடப்பட்ட மனித வடிவிலான ரோபோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் லாஸ் வேகாஸில் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறும். பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் புதிய தொழில்நுட்பங்களை இங்கே அறிமுகம் செய்யும். அந்த வகையில் இந்த ஆண்டு கண்காட்சியில், மக்களை வரவேற்கும் பணியில் அமேகா என்ற மனித வடிவிலான ரோபோ நிறுத்தப்பட்டுள்ளது. இன்முகத்துடன் கலந்துரையாடுவது, முக பாவனைகளை காட்டுவது என அமேகாவின் செயல்கள் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.