அமேசான் காட்டுத்தீயால் அரியவகை பாம்புகள் அதன் வாழ்விடங்களை விட்டு வெளியேறுதாகவும், பல வகையான பாம்புகள் அழியும் சூழலில் இருப்பதாகவும் வனஉயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசான் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது
இந்நிலையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அரிய வகை உயிரினங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வனஉயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமேசான் காடுகளில் உள்ள அரியவகை பாம்புகள் அதன் வாழ்விடங்களை விட்டு வெளியேறுதாகவும், பல வகையான பாம்புகள் அழியும் சூழலில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதற்கிடையே, தீயை அணைக்க ராணுவப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 24ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு தீயணைப்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுவர் என்று பிரேசில் நாட்டு அரசு தெரிவித்துள்ளது
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த வலியுறுத்தி பிரேசில் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்