ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு இதுவரை 80 ஆயிரம் கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவின் அதிக சம்பளம் பெறும் டெக் நிறுவன சி.இ.ஓக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் Zuckerberg இந்திய மதிப்பில் 4.17 இலட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். 2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பங்குகள் மற்றும் பணமாக இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலில் கூகுள், அதனைத் தொடர்ந்து அதன் ஆரம்ப நிறுவனமான ஆல்பாபெட் ஆகியவற்றின் சி.இ.ஓ-வாக இருக்கும் சுந்தர் பிச்சை 80 ஆயிரம் கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். 2015 முதல் 2020 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு பங்குகள், இழப்பீடுகள், பணம் என இந்த தொகை சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.