இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணியவோ அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யவோ தேவையில்லை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தற்போதைக்கு தொடரும் என்றும், வரும் மார்ச் மாதம் காலாவதியாகும் இச்சட்டம் விரைவில் நீக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார். கூடுதல் தடுப்பூசி தொடர்பான அசாதாரண பரப்புரையினால் PLAN B விதிமுறைகளை பொதுமக்கள் நல்ல முறையில் பின்பற்றியதால், மீண்டும் A விதிமுறைகளுக்கு திரும்பலாம் என்றும், B விதிமுறைகள் அடுத்தவாரம் காலாவதியாகும் என்றும் ஜான்சன் கூறினார்.
கொரோனா சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்ற நடைமுறை முடிவுக்கு வரும் என்றும், இருப்பினும் வணிக நிறுவனங்கள் விரும்பினால் கொரோனா பாஸ்களை தொடரலாம் எனவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.இங்கிலாந்தில் ஒமைக்ரான் அலை உச்சத்தை எட்டியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறிவரும் நிலையில், போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.