சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா ‘சிங்கிள்ஸ் டே’ ஷாப்பிங் மூலமாக 74 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது. கொரோனா பொது முடக்கத்தை தொடர்ந்து பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாக இதனை பார்க்கின்றனர் நிதி துறை சார்ந்த வல்லுநர்கள்.
சுமார் 11 நாட்கள் அதாவது கடந்த நவம்பர் 1 முதல் நவம்பர் 11 வரை தனது பயனர்களுக்கு சிங்கிள்ஸ் டே சேல்ஸ் ஆஃபர்களை அள்ளிக் கொடுத்துள்ளது அலிபாபா. மொத்தமாக 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை தள்ளுபடி செய்து இந்த விற்பனையை நடத்தியுள்ளது.
அதன் மூலம் 74 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது அலிபாபா. இது அமேசான் நிறுவனம் கொண்டு வந்த சர்வதேச பிரைம் டே விற்பனையை காட்டிலும் பலமடங்கு அதிகமாக பார்க்கப்படுகிறது.
‘மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைனில் ஷாப்பிங் செய்ததே அலிபாபாவின் வியாபார யுக்தி ஹிட்டாக காரணம்’ என்கின்றனர் சக இ-காமர்ஸ் நிறுவனர்கள்.
சீனாவில் சிங்கிள்ஸ் டே விற்பனையில் அலிபாபா மட்டுமல்லாது அந்த நாட்டில் உள்ள மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் அதிகளவில் விற்பனை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.