அமெரிக்காவில் 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே செல்லும் 14 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட்டு, எந்த இடையூறும் இல்லாமல் விமான சேவைகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த அலைக்கற்றையால் விமான போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக ஏர் இந்தியா, எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையே நேற்று இயக்கப்படவிருந்த 8 விமானங்களையும், இன்று திட்டமிடப்பட்டிருந்த 6 விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.