அரை நூற்றாண்டுக்கு பின் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பத் தயாராகும் நாசா!

அரை நூற்றாண்டுக்கு பின் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பத் தயாராகும் நாசா!
அரை நூற்றாண்டுக்கு பின் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பத் தயாராகும் நாசா!
Published on

நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கான விண்கலனின் சோதனை ஓட்டத்தை அமெரிக்கா அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்க திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்கலன் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பரிசோதிக்கும் முயற்சிகள் அடுத்த வாரம் தொடங்குகின்றன.

322 அடி உயர் கொண்ட பிரமாண்ட ராக்கெட் முதலில் ஆள் இன்றி அனுப்பப்பட்டு சோதிக்கப்படும். முதல் சோதனை 6 வார காலத்திற்கு நீடிக்க உள்ளது. இடையில் விண்கலனில் பழுது ஏதும் ஏற்பட்டால் அதை திரும்ப அழைத்துக்கொள்ளும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் என்ற இந்த ஒட்டுமொத்த சோதனை ஓட்ட திட்டத்திற்கும் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதனை நிலவுக்கு அனுப்பும் போது செலவு சுமார் 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com