பிரதமர் மோடியின் அமெரிக்க பயணங்களால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி மேற்கொண்ட அமெரிக்கா பயணத்தின் போது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து எண்ணெய் ஏற்றுமதிக்கான தடையை விலக்கினார்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பொருளாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தித்துறை உள்ளிட்ட ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில், 2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. 40 ஆண்டுகளாக நீடித்த வந்த தடைக்குப் பிறகு, அமெரிக்கா கச்சா எண்ணெய் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.