இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பின் தமிழர் நிலப்பகுதி விடுவிப்பு

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பின் தமிழர் நிலப்பகுதி விடுவிப்பு
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பின் தமிழர் நிலப்பகுதி விடுவிப்பு
Published on

இலங்கையில் 30 ஆண்டுகளாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 29 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசவிளான் கிராமத்தில் 29 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையத்திற்கு உட்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப்பகுதியிலிருந்து ராணுவம் விலகியுள்ளது. யாழ், ஆயர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக அந்தப்பகுதி விடுவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பழமையான உக்கரமாதா ஆலயம், ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்டவை திறந்து விடப்பட்டன.

30 ஆண்டுகளுக்கு பின் தங்கள் பகுதிகளை கண்ட தமிழர்கள், தங்கள் மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீருடன் புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டனர். இது போல் வசவிளான் கிராமத்தின் எஞ்சிய பகுதிகளில் ராணுவக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ் கலவன் பாடசாலையை மீண்டும் செயல்படச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com