சட்டைப் பையில் கோழிக் குஞ்சுடன் ஆப்கன் சிறுவர்கள்... இணைய தளங்களில் வைரலான காட்சி

சட்டைப் பையில் கோழிக் குஞ்சுடன் ஆப்கன் சிறுவர்கள்... இணைய தளங்களில் வைரலான காட்சி
சட்டைப் பையில் கோழிக் குஞ்சுடன் ஆப்கன் சிறுவர்கள்... இணைய தளங்களில் வைரலான காட்சி
Published on

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவர்கள், தங்கள் சட்டைப் பைகளில் கோழிக்குஞ்சை வைத்து, வெளியில் எடுக்கும் காட்சி உலகம் முழுவதும் இணைய வெளியில் வைரலாக பரவியுள்ளது. அந்த வீடியோவை கணித ஆசிரியர் ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆசிரியர் பெயர் குவாத்சியா குவான்பேரி.

செல்ல நாய்க் குட்டிகளுடன் குழந்தைகள் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்தச் சிறுவர்கள் கோழிக் குஞ்சுகளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சுற்றுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மூன்று பச்சிளம் சிறுவர்களின் அப்பாவித் தோற்றம் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்தக் காட்சியில் அவர்களிடம், சட்டைப் பையில் என்ன இருக்கிறது என்று ஒருவர் கேட்கிறார். ஒவ்வொருவராக தயக்கத்துடன் தங்கள் பைகளில் இருந்து கோழிக்குஞ்சுகளை திருதிருவென விழித்தபடி எடுத்து வெளியே காட்டுகிறார்கள். பிறகு அவர்கள் மெல்ல அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். அந்தச் சிறுவர்களின் வெள்ளந்தியான நடவடிக்கைகள் உலகத்தையே கவர்ந்துவிட்டன.

கோழிக்குஞ்சுகளைத் திருடிய கோழிக்குஞ்சுகள் என்ற தலைப்பிடப்பட்ட அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com