அதானிக்கு மேலும் சிக்கல் | ஆஸ்திரேலியால் இனவெறி பாகுபாடு.. பழங்குடி இன மக்கள் அதிர்ச்சி புகார்!

ஆஸ்திரேலியாவின் அதானி குழும பணியாளர்கள் மீது இன பாகுபாடு காட்டியதாக பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதானி
அதானிஎக்ஸ் தளம்
Published on

அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதானி, அமெரிக்கா
அதானி, அமெரிக்காஎக்ஸ் தளம்

சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம் பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| நாளை வாக்கு எண்ணிக்கை..போலீஸ் அதிரடி உத்தரவு.. அஜித் பவாரை முதல்வராக சித்தரித்து பேனர்!

அதானி
தீயாய் பரவிய லஞ்ச குற்றச்சாட்டு செய்தி! கடும் வீழ்ச்சியை சந்தித்த அதானி குழும பங்குகள்! நடந்ததுஎன்ன?

மறுப்பு தெரிவித்த அதானி குழுமம்

இதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அது தனது அறிக்கையில், “இது அடிப்படை ஆதாரமற்றது; இதுதொடர்பாக தாங்களும் சட்ட நடவடிக்கை எடுப்போம்” என அது தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர் குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மீண்டும் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளார். இதனால், இந்த விவகாரம் இந்திய அரசியலில் மீண்டும் பூதாகரமாகியுள்ளது.

மறுபுறம், அதானி குழுமத்துடனான எரிசக்தி துறை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக அறிவித்துள்ளார். கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்துசெய்துள்ளது.

வில்லியம் ரூட்டோ, கவுதம் அதானி
வில்லியம் ரூட்டோ, கவுதம் அதானிஎக்ஸ் தளம்

அதானி குழும பணியாளர்கள் இன பாகுபாடு

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் அதானி குழும பணியாளர்கள் பழங்குடியின மக்களிடம் இன பாகுபாடு காட்டியதாக பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் அதானி குழுமம் சுரங்கம் ஒன்றை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தின் அருகே பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்களிடம்தான் அதானி குழும பணியாளர்கள் இன பாகுபாடு காண்பித்ததாகக் கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்கத்தின் அருகில் உள்ள நீரூற்றுகளை, அம்மக்கள் பயன்படுத்தவிடாமல் அதானி குழுமத்தினர் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பழங்குடியின மக்கள் சார்பில் குயின்ன்ஸ்லாந்தில் உள்ள நாகானா யார்பைன் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ காலசார கஸ்டடியன்ஸ், ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்த புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி! பின்னணி இதுதான்!

அதானி
முறைகேட்டில் ஈடுபட்டாரா கவுதம் அதானி? அமெரிக்காவில் வழக்குப்பதிவு!

சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள்

இதுகுறித்து நாகானா யார்ர்பைன் மூத்த கலாசார பாதுகாவலர் அட்ரியன் புர்ரகுப்பா, "நாங்கள் பல ஆண்டுகளாக அதானியிடம் இருந்து பாகுபாடு மற்றும் அவதூறுகளை அனுபவித்து வருகிறோம். இனியும் இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர்களின் நடத்தை குறித்து தொடர்ந்து தெரிவித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். இனி, சட்ட உதவி மட்டுமே ஒரே பதில்" என தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை Bravus Mining and Resourcesஇன் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். அவர், “ஆஸ்திரேலிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே அந்தச் சுரங்கம் இயங்கி வருகிறது. ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமிருந்து முறையாக எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தச் சுரங்கத்திற்கு, அதானி குழுமத்துக்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக அந்நாட்டு பூர்வகுடிமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தற்போது இனவெறி குற்றச்சாட்டும் வெடித்துள்ளது.

இதையும் படிக்க: BGT 2024-25|உடற்தகுதியை நிரூபித்த முகமது ஷமி..இருந்தும் தேர்வு செய்யப்படாததுஏன்? மோர்கல் சொல்வதென்ன?

அதானி
“எங்கள் வங்கிக் கணக்குகளை சுவிஸ் முடக்கியதா? இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு” - அதானி குழுமம் விளக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com