ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு மாதந்தோறும் கட்டணம் செலுத்தவேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்த நிலையில், நடிகர் சிபிராஜ் அவரை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதை அடுத்து அவர், ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக ட்விட்டரில் அளிக்கப்படும் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
அந்த வகையில் ட்விட்டரில் பிரபலங்கள், பெரிய நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு 'ப்ளூ டிக்' வழங்கப்படுகிறது. இந்த ப்ளூ டிக் வசதிக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். அதன்படி, ட்விட்டரில் ப்ளூடிக் பயனாளர்கள் மாதம் 8 அமெரிக்க டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.660 ஆகும். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிபி சத்யராஜ், எலான் மஸ்க்கின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, “உங்கள் கூகுள் பே எண்ணை எனக்கு அனுப்புங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.