ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு நடத்திய வெற்றிக்கொண்டாட்டத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள தலிபான்கள் அடுத்து மீதமுள்ள பஞ்சஷீர் பகுதியை கைப்பற்ற போரிட்டு வருகின்றனர். இப்போரில் தங்கள் படைகளின் முன்னேற்றத்தை கொண்டாடும் வகையில் தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் குறைந்தது 17 பேர் பலியானதாக உள்ளூர் தொலைக்காட்சி செய்தியை சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடத்தக்கூடாது என தலிபான் படையினருக்கு அந்த அமைப்பின் தலைமை உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்நிகழ்வில் குறைந்தது 2 பேர் இறந்துள்ளதாக காபூல் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது தொடர்பான அறிவிப்பை தலிபான்கள் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.