‘கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடையலாம்’ - ஐநா ஆய்வு 

‘கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடையலாம்’ - ஐநா ஆய்வு 
‘கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடையலாம்’ - ஐநா ஆய்வு 
Published on
பொது முடக்கத்தால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடையக்கூடும் என ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள உலக நாடுகள் பெரும்பாலானவை பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஐநா மக்கள் நிதியம் என்ற அமைப்பு அண்மையில் ஆய்வு நடத்தியது. அதில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து தடையால் கருத்தடை சாதனங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
உலகம் முழுவதும் 114 நாடுகளில் உள்ள சுமார் 5 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதாகவும், இவர்களில் 4 கோடியே 70 லட்சம் பெண்களுக்கு பொது முடக்கத்தால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல் போகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடையக்கூடும் எனவும், குழந்தை திருமணங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
 
கொரோனா அச்சத்தால் பெண்கள் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து வருவதும், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் கர்ப்பங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்றும் ஐநா மக்கள் நிதியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com