அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எஞ்சின் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம் ட்ரக் லாரி மீது மோதியதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இரு பயணிகளுடன் புறப்பட்ட அந்த சிறிய ரக விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு 1 மைல் தொலைவில் இருந்த இடத்தில் கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்க விமானி முடிவு செய்தார்.
சாலையில் வாகனங்கள் அதிகம் இல்லாத நேரத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், முன்னே சென்றுக் கொண்டிருந்த டிரக் லாரி மீது விமானம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி தீப்பிடித்ததில், அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. ட்ரக் லாரியில் மூன்று பேர் இருந்ததாக கலிபோர்னியா நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கின்றனர். விமானத்தில் பயணித்த விமானி, துணை விமானி இருவரும் பெரிய காயங்களின்றி உயிர்தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.