இதயத்தில் பாய்ந்த புல்லட்; மிரண்டுபோன டாக்டர்கள்.. ஷின்ஸோ அபே கொலை பற்றி ஷாக் ரிப்போர்ட்!

இதயத்தில் பாய்ந்த புல்லட்; மிரண்டுபோன டாக்டர்கள்.. ஷின்ஸோ அபே கொலை பற்றி ஷாக் ரிப்போர்ட்!
இதயத்தில் பாய்ந்த புல்லட்; மிரண்டுபோன டாக்டர்கள்.. ஷின்ஸோ அபே கொலை பற்றி ஷாக் ரிப்போர்ட்!
Published on

துப்பாக்கி கலாசாரம் பெரிதும் இல்லாதன் ஜப்பானில், அந்நாட்டின் பிரதமராக கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பதவிவகித்த ஷின்ஸோ அபே பொதுவெளியில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாரா என்ற பகுதியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்பதற்காக ஷின்ஸோ அபே பாதுகாப்பு படைகள் சூழவே சென்றிருந்திருக்கிறார்.

ஆனால் காலை சுமார் 11.30 மணியளவில், உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவரது பின்புறத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதால் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறார் அபே.

உடனடியாக நாரா மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சிகிச்சைக்காக ஷின்ஸோ அபே அழைத்துச் செல்லப்படிருக்கிறார். அங்கு அவருக்கு தொடர்ந்து 5 மணிநேரமாக தொடர் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. Cardiopulmonary arrest என சொல்லக் கூடிய இதய மற்றும் மூச்சு செயலற்ற நிலையில் அவர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரத்தம் ஏற்றப்பட்டும், மாரடைப்புக்கான உயர்தர சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கி, அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வந்தார்கள் என ஷின்ஸோ அபேவின் சகோதரர் டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாக BBC செய்தியறிக்கை மூலம் அறியலாம்.

ஆனால் ஷின்ஸோவின் மார்பு மற்றும் கழுத்துப்பகுதியில் சுடப்பட்டதால் அதீத உதிரம் வெளியேறியிருக்கிறது. இதனால் சிகிச்சை பலனின்றி 67 வயதான அவர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

ஷின்ஸோவை துப்பாக்கியால் சுட்டவர் Tetsuya Yamagami என்ற 41 வயதுடைய முன்னாள் கடற்படை வீரர் என்பது தெரிய வந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே யாமகாமி பாதுகாப்பு வீரரகளால் மடக்கி பிடிக்கப்பட்டிருக்கிறார்.

NHK செய்தி நிறுவன அறிக்கைப்படி, அபேவின் நிர்வாகத்தால் அதிருப்தி அடைந்ததன் விளைவாக யாமகாமி இந்த கொடூர செயலில் இறங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபேவை சுட்ட அந்த நபரின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள் சிலவும் கண்டறியப்பட்டிருப்பதாகவும், கையால் செய்யப்பட்ட துப்பாக்கியை கொண்டுதான் ஷின்ஸோ அபேவை அந்த நபர் சுட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டிருக்கும் அந்த யாமகாமி 2005ம் ஆண்டு வரை ஜப்பானின் கடற்படையில் பணியாற்றியதாகவும் பல உள்ளூர் செய்தி நிறுவனங்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

முன்னதாக, பெருங்குடல் அழற்சி காரணமாக இளம் வயதிலிருந்தே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே, அதே நோய் தொந்தரவு காரணமாக கடந்த 2007ம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com