சைபிரியாவில் விமானத்தின் அடிப்பாகத்தை பொத்துக்கொண்டு ஏராளமான தங்கக்கட்டிகள் விழுந்துள்ளது
சைபிரியாவின் யகுஸ்டிக் விமான நிலையத்தில் இருந்து நிம்பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 9 டன் அளவிற்கு தங்கம், பிளாட்டினம் போன்றவை இருந்தன. விமானம் ஓடுதளத்தில் இருந்து பறக்க ஆரம்பித்த போது திடீரென சில பொருட்கள் விழுந்தன. விமான நிலைய அதிகாரிகள் ஓடுதளத்திற்கு சென்று பார்வையிட்ட போது அவை தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் என தெரியவந்தது. விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பொருட்கள் அதன் அடிப்பாகத்தை பொத்துக்கொண்டு விழுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த விமானநிலைய காவலர்கள் இந்தப்பொருட்களை சேகரித்தனர். இதனையடுத்து நடுவானில் தத்தளித்த விமானம் அருகில் உள்ள மற்றொரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.