போர்நிறுத்தம், பிணைக் கைதிகளை மீட்கும் விவகாரத்தை முன்நிறுத்தி இஸ்ரேலில் நாடு தழுவிய அளவில் நடந்த மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்தில் பல்லாயிரக்கானோர் பங்கேற்றனர்.
இஸ்ரேலைச் சேர்ந்த பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர்கொன்றதன் எதிரொலியே இந்த போராட்டம்...
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர், 253 பேரை பிணைக் கைதிகளாக சிறை வைத்தனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில், சிலரை ஹமாஸ் அமைப்பு கொன்றது.
மீதமுள்ள 101 பிணைக் கைதிகளை மீட்கக் கோரி இஸ்ரேல் அரசுக்கு பொதுமக்கள் கடும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
அதன் நீட்சியாக போர் நிறுத்தத்தை அறிவிக்கக்கோரியும், பிணைக் கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தியும் இஸ்ரேல் தொழிலாளர்கள் சங்கத்தினரால் கடைபிடிக்கப்பட்ட பொது வேலைநிறுத்தம், நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது.
விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முடங்கின. வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
மனிதாபிமானம் கொண்ட இஸ்ரேல் மக்கள் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில், தெருக்களில் ஒன்றுக் கூடிய நெதன்யாஹூ, அரசுக்கு எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பிரதமர் நெதன்யாஹூ மற்றும் மூத்த அமைச்சர்களின் வீடுகளின் முன்பாக கூடியவர்கள், பிணைக் கைதிகளை மீட்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், பிணைக் கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசு சம்மதம் தெரிவித்தது. எனவே, இதற்கான ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்புடன் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.