கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமியை வந்தடைந்த மர்ம சிக்னல்... இதற்கு பின்னால் என்ன இருக்கிறது? வாங்க பார்க்கலாம்.
நாசா கடந்த ஆண்டு சைக் 16 (Psyche 16) என்ற விண்கல்லை ஆராய்வதற்கு விண்ணில் அனுப்பிய விண்கலம்தான் சைக் (Psyche). இதன் வேலை விண்கற்களை கண்டுபிடித்து ஆராய்வது. இப்பொழுது இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. அதாவது பூமியிலிருந்து சுமார் 14 கோடி தொலைவில் இருக்கிறது.
பொதுவாக விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் பொழுது அதில் அனுப்புதல், பெறுதல் என்ற இரு அமைப்புகள் பொருத்தப்பட்டு இருக்கும். அதாவது நாம் பூமியிலிருந்து விண்கலத்தை இயக்கவேண்டும் என்றால், நமது கட்டளையை ரிசிவர் அமைப்பின் மூலம் பெற்று விண்கலமானது நிறைவேற்றும். அதேபோல் அங்குள்ள தரவுகளை அது செண்டர் (sender) என்ற அமைப்பின் மூலம் அனுப்பும்.
இதில் பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையில் அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தும் ரேடியோ அலைவரிசை மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்கலம் அனுப்பும் தரவுகள் பூமியை வந்தடைய சில நாட்கள் அல்லது சில வாரங்கள் ஆகலாம். இந்த நேரத்தைக் குறைப்பதற்காக, விஞ்ஞானிகள் லேசரை பயன்படுத்த நினைத்தனர். லேசர் மூலம் அனுப்பப்படும் தரவுகள் உடனடியாகவும், அதிகமாகவும் அனுப்பமுடியும் என்று நம்பினர். இதை அடிப்படியாகக் கொண்டு நாசா சைக் விண்கலத்தில் லேசர் அமைப்பையும் கையாண்டனர்.
இதுவரை சைக் விண்கலமானது ரேடியோ அலைவரிசையில் நிறைய தரவுகளை கொடுத்து வந்தாலும், லேசர் ஒளிகற்றையானது வேலை செய்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்கவே கடந்த சில நாட்களுக்கு முன் நாசா லேசர் அமைப்பை ஒத்திகைப்பார்த்தது.
அப்போது 14 கோடி மைலுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருக்கும் சைக் விண்கலத்திலிருந்து பூமிக்கு லேசர் சிக்னல் வந்தது. இது மர்ம சிக்னல் இல்லை, சைக்-கின் லேசர் சிக்னல் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சைக் விண்கலம் தனது இலக்கை விட 25 மடங்கு அதிக தரவுகளை பரிமாறி சாதனை படைத்துள்ளது என கூறப்படுகிறது.
இந்த லேசர் சிக்னலை, ஒரு விண்கலத்திலிருந்து மற்றொரு விண்கலத்தை தொடர்புக்கொள்ளவும் பயன்படுத்தபடலாம் என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். வரும்காலத்தில் லேசர் சிக்னல் உதவியால் பல அபூர்வ தகவல்களை ஆராய்சியாளர்கள் பெறலாம்...!