48 பேரின் உயிரைப் பறித்த குவைத் தீ விபத்து எப்படி நிகழ்ந்திருக்கலாம்? வரைகலை காட்சி விளக்கம்

குவைத்தில் 7 தமிழர்கள் உள்ளிட்ட 48 பேரின் உயிரைப் பறித்த தீ விபத்து எப்படி நிகழ்ந்திருக்கலாம்.. இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை வரைகலையில் விளக்கப்பட்டுள்ளது.
குவைத் தீ விபத்து.. வரைகலை விளக்கம்
குவைத் தீ விபத்து.. வரைகலை விளக்கம்pt web
Published on

குவைத்தின் Mangaf, Ahmadi Governorate என்ற இடத்தில் 7 அடுக்குமாடி கட்டடத்தில்தான் இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்து 12 ஆம்தேதி அதிகாலை 4 மணிக்கு நேரிட்டுள்ளது. இந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் வீட்டு சமையலறையில் பற்றிய தீ அந்தக் கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கும் வெகு விரைவாகப் பரவியது. இந்தத் தீ விபத்தைத் தொடர்ந்து கடுமையான கரும்புகை சூழ்ந்தது. அதிகாலை நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் புகையை உணர்ந்து தப்பிக்க நினைத்துள்ளனர்.

தீ விபத்து பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக படிக்கட்டுகள் வழியே தப்ப முயன்றனர். கரும்புகை சூழ்ந்ததால் அவர்களால் தப்ப முடியவில்லை. மாடிக்குச்செல்லும் கதவு பூட்டப்பட்டதால் அங்கும் செல்ல முடியவில்லை. இதனால் அறைகளின் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிக்க முயன்றனர். இதில் பலரின் முயற்சி உயிரிழப்பில் முடிந்தது. சிலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து குவைத் அரசு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் முடிவில் விரிவான விவரங்களை எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com