‘காதல் அழிவதில்லை’ | 10 ஆண்டுகள் கோமாவில் இருந்த கணவர்... அன்பும் அக்கறையும் கொண்டு மீட்ட மனைவி!

சீனாவில், மாரடைப்பு ஏற்பட்டு 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது கணவருக்கு நினைவு திரும்பியதால் இன்ப அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ள சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீனா -  கோமாவில் இருந்த கணவரை மீட்ட மனைவி
சீனா - கோமாவில் இருந்த கணவரை மீட்ட மனைவிமுகநூல்
Published on

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் சன் ஹோங்சியா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சன் ஹோங்சியா கோமாவிற்கு சென்றுள்ளார். இதனால், மிகுந்த மனவேதனை அடைந்த சன் ஹோங்சியாவின் மனைவி ஹாங்சியா தனது கணவர் மீண்டு வருவார் என்ற உறுதியுடன் அவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்துள்ளார்.

மேலும் இவர்களின் இரண்டு குழந்தைகளும் தாய் ஹாங்சியாவுக்கு தொடர்ந்து உதவியுள்ளனர். இந்நிலையில், 10 ஆண்டுக்கு பிறகு மாரடைப்பால் கோமாவிற்கு சென்ற சன், தற்போது நினைவு திரும்பியுள்ளார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ஹாங்சியா தனது அளவு கடந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

இது குறித்து தெரிவித்த ஹாங்சியா, “என் கணவர் 10 வருடம் கோமாவில் இருந்த போது நான் சந்தித்த மனவேதனை ஏராளம். அப்போது எனது இரண்டு குழந்தைகள்தான் எனக்கு வலிமையையும், நம்பிக்கையும் வழங்கினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஹாங்சியாவின் மாமனார் (84), “அவள் என் மருமகள். ஆனால், எனது மகளைவிட சிறந்தவள். ஆகவே, அவளை யாரோடும் ஒப்பிடமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.

சீனா -  கோமாவில் இருந்த கணவரை மீட்ட மனைவி
மன உளைச்சலால் உணவு அதிகரிப்பு; 34 வயது இளைஞர் மரணம்

இந்நிலையில், தனது தொடர் கண்காணிப்பாலும், அளவு கடந்த அன்பினாலும், தன் கணவரை மீட்டெடுத்த இப்பெண்ணுக்கு இணையவாசிகள் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com