பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் பிரமாண்ட கார் அணிவகுப்பு நடைபெற்றது.
ஏழு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து நள்ளிரவு அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, இந்த சுற்றுப்பயணத்தை முன்னிட்டு நேற்று அறிக்கை வெளியிட்டார். ஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி - மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் தன்னுடன் முதல்முறையாக பங்கேற்பது மிகுந்த பெருமைக்குரியது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் சந்தித்து பேசப் போவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐநா சபை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள ஹவ்டி -மோடி நிகழ்ச்சியை முன்னிட்டு ஹூஸ்டனில் கார்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய அமெரிக்கா கொடிகளை கட்டியபடி சுமார் 200 க்கும் அதிகமான கார்கள் இதில் பங்கேற்றன.