3 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுமி.. காப்பாற்றிய இந்திய மீட்பு நாய்கள்!

3 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுமி.. காப்பாற்றிய இந்திய மீட்பு நாய்கள்!
3 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுமி.. காப்பாற்றிய இந்திய மீட்பு நாய்கள்!
Published on

இந்தியாவின் பேரிடர் மீட்பு குழுவின் ரோமியோ மற்றும் ஜூலி என்ற நாய்கள், துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றியுள்ளது எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகு மூன்று நாட்களாக இடிபாடுகளுக்குள் புதைந்திருந்த 6 வயது சிறுமியை , மீட்பு பணிக்காக இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மோப்ப நாய்களான ரோமியோ மற்றும் ஜூலியின் உதவியுடன் மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் நாய்க் குழுவின் ஒரு பகுதியான ரோமியோ மற்றும் ஜூலி, இடிபாடுகளுக்குள் 6 வயதான சிறுமி நஸ்ரீன் புதைந்திருந்த இடத்தை கண்டறிவதில் முக்கியப் பங்காற்றின. அவைகளின் உதவியின்றி சிறுமி உயிருடன் மீட்கப்பட்டிருக்க முடியாது என்று மீட்பு குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து, ரோமியோ மற்றும் ஜூலியை கையாளும் கமாண்டர் குர்மிந்தர் சிங் கூறுகையில், “ஜூலி தான் முதலில் நஸ்ரீனை மோப்பம் பிடித்து மீட்பு குழுவை எச்சரித்தார். பின்னர் ரோமியோ வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த சிறுமி உயிருடன் இருப்பதை உறுதி செய்யப்பட்டது. நஸ்ரீன் மீட்கப்பட்ட பிறகு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் விமானத்தில் இந்திய ராணுவத்தின் மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்தார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தின் "ஆபரேஷன் தோஸ்த்" முன்முயற்சியின் கீழ் நிறுத்தப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு குழுவுடன், மோப்பம் மற்றும் மீட்பு பணியில் பயிற்சி பெற்ற ரோமியோ மற்றும் ஜூலி என்று அழைக்கப்படும் இரு நாய்கள் துருக்கிக்கு சில தினங்களுக்கு முன்னர்தான் அனுப்பப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com