சீனாவில் நூற்றாண்டு பழமையான மிகப் பெரிய கட்டடம் வேறிடத்திற்கு நகர்த்திச் செல்லப்பட்டது. இது மக்களின் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்து வருகின்றது.
வணிக நகரான ஷாங்காயில் 3,800 டன் எடையுடைய கட்டடம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நகர்த்தி செல்லப்பட்டது. கட்டடத்தின் அடியில் ஸ்லைடிங் ரயில்ஸ் எனப்படும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, தரையில் இருந்து கட்டடம் சில அடி உயரம் உயர்த்தப்பட்டது.
பிறகு தண்டவாளத்தில் வைத்து 18 நாட்களில் 62 மீட்டர் தூரத்திற்கு கட்டடம் நகர்த்தப்பட்டது. கட்டடங்களை சில அடி உயர்த்தும் தொழில்நுட்பம் பரவலாக உள்ள நிலையில், பிரம்மாண்ட கட்டடம் நகர்த்திச் செல்லப்படுவதை சீன மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.