ஜெர்மனியில் 93 வயதுடைய முதியவர் 5232 யூத சிறைக் கைதிகளை கொல்வதற்கு உதவயிதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரில் 1944 - 1945 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் போலந்தின் டான்ஸக் சிறையில் கார்டாக பணி புரிந்தவர் புரூணோ.டி என்பவர். அந்தக் காலக்கட்டத்தில் யூதர்கள் உள்பட 65,000 சிறைக்கைதிகள் ஸ்டான்ஸ்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்போட்டார் சிறையில் கொல்லப்பட்டனர். அவர்கள் பலர் தலையில் சுடப்பட்டும், விஷவாயு பரப்பியும் துடிக்கதுடிக்க கொல்லப்பட்டனர்.
அந்தச் சிறையில் அப்போது கார்டாக பணிபுரிந்த புரூணோவுக்கு 18 வயது. அப்போது 5232 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக ஹாம்பர்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி ஹாம்பர்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைத் தண்டனை பெற்ற புரூணோவுக்கு இப்போது 93 வயதாகிறது.
இந்தத் தண்டனை குறித்து பேசிய புருணோ "உயிரிழந்த உறவினர்கள் இத்தனை ஆண்டுகாலம் அனுபவித்து வந்த மன உளைச்சலுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றத்துக்கு தான் உடைந்தையாக இருந்தது குறித்து புரூணோ இதுவரை ஒத்துக்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.