’பெண் என்பதால் மறுப்பதா?’ 550 வருட பழமையான இசைக்குழு மீது வழக்குத் தொடர்ந்த சிறுமி!

’பெண் என்பதால் மறுப்பதா?’ 550 வருட பழமையான இசைக்குழு மீது வழக்குத் தொடர்ந்த சிறுமி!
’பெண் என்பதால் மறுப்பதா?’ 550 வருட பழமையான இசைக்குழு மீது வழக்குத் தொடர்ந்த சிறுமி!
Published on

பெண் என்பதால், தன்னை சேர்க்க மறுத்த பழமையான இசைக்குழு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் 9 வது சிறுமி ஒருவர்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ளது, கதீட்ரல் இசைக்குழு. தேவாலயத்தில் பாடும் இந்த இசைக்குழு தொடங்கி, 554 வருடங்கள் ஆகிறது. 1465 ஆம் ஆண்டு இரண்டாம் பிரடெரிக் தொடங்கிய இசைக்குழு இது. அப்போதிருந்து இப்போது வரை, இந்த இசைக்குழுவில் பெண்கள் இடம்பெற்றதில்லை. ஆண்களே இடம்பெற்றுள்ளனர். 


இந்நிலையில் 9 வயது சிறுமி ஒருவர், இதில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு ஆடிஷன் நடந்தது. சிறப்பாக செயல்பட்டும் அவர் அந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை. காரணம் கேட்டபோது, பெண் என்பதால் சேர்க்கவில்லை என்று இசைக்குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம உரிமை பேசும் காலத்தில் பெண் என்பதால் சேர்க்க மறுத்ததை அடுத்து, அந்த சிறுமி வழக்குத் தொடர்ந்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com