உக்ரைன் மீதான போரில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காத அதிருப்தியில் ரஷ்ய ராணுவ உயரதிகாரிகள் 8 பேரை அதிபர் விளாடிமிர் புதின் நீக்கியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 3 வாரங்களாக போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தரப்பில் பாதிப்புகள் இருந்தபோதும், ரஷ்யப்படைகளும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி ரஷ்யப்படைகளிடம் முன்னேற்றம் இல்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் கடும் அதிருப்தியும் விரக்தியும் அடைந்துள்ளார். இதுபற்றி உக்ரைன் தாக்குதலில் முன்னேற்றம் காணாத 8 படைகளின் தளபதிகளை புதின் சரமாரியாகக் கேள்விக்கணைகளால் துளைத்துள்ளார். அந்த 8 தளபதிகளையும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள அவர், புதிய தளபதிகளையும் நியமித்துள்ளார். இந்தத் தகவலை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் டானிலோவ் தெரிவித்துள்ளார்.