மால்டோவாவில் 62 வயதான முதியவர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்டுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவின், உஷ்டியா கிராமத்தில் 74 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் அவரது சொந்த வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில், மூதாட்டி இறந்ததை அறிந்த உறவினர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த காவல்துறை, மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, மூதாட்டியின் கொலை வழக்கில் அவரின் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞருக்கு தொடர்பு உள்ளது என்று சந்தேகித்த காவல்துறை, அந்த இளைஞரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
அங்கே அந்த நபரின் வீட்டை சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறத்தில் இருந்து ’உதவுங்கள், உதவுங்கள்’ என்று அழுகும் குரல் கேட்டுள்ளது.
பிறகு, சத்தம் கேட்ட இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குரல் வந்த இடத்தில், மண்னை தோண்டி பார்த்தபோது, கழுத்து அறுக்கப்பட்டநிலையில், 62 வயதான முதியவர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கிட்டதட்ட நான்கு நாட்கள் வரை முதியவர் அங்கேயே இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு சுயநினைவு இருந்ததை அறிந்த காவல்துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து, முதியவரிடம் விசாரணை நடத்தியதில், முதியவரும், இந்த 18 வயது இளைஞரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டள்ளது. இதனால் இளைஞர் முதியவரை கழுத்தில் வெட்டியுள்ளார் அந்த இளைஞர். இதனால், முதியவர் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து, இளைஞரின் வீட்டின் பின்புறம் இருந்த பேஸ்மண்ட்டில் முதியவரை இந்த இளைஞர் உயிரோடு புதைத்துள்ளார் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.
இந்தவகையில், உயிரிழந்த மூதாட்டியையும் இந்த இளைஞர்தான் கொலை செய்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.