கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டு நிலைகுலைந்து போயுள்ள டோங்கா நாட்டில் 57 வயது முதியவர் ஒருவர் 27 மணி நேரம் கடலில் தத்தளித்து பின் உயிர் பிழைத்துள்ளார்.
தெற்கு பசிபிக் கடலில் எரிமலை வெடித்து அதன் விளைவாக டோங்கா நாட்டில் கடந்த சனிக்கிழமை சுனாமி தாக்கியது. 5 நாட்களுக்கு பிறகே டோங்கா நாட்டுக்கு வெளியுலக தொடர்பு கிடைத்தது. இந்நிலையில் 57 வயதான மாற்றுத்திறனாளி முதியவர் லிசாலா ஃபொலாவு, சுனாமி அலையால் கடலில் அடித்து செல்லப்பட்டார்.
இதன்பின்னர் , கிட்டதட்ட 27 மணி நேரம் போராடி நீந்தி வந்து கரை சேர்ந்ததாக அவர் கூறுகிறார். இந்த போராட்டத்தின்போது 9 முறை கடல் நீரில் மூழ்கியதாகவும், பிழைத்தே ஆக வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் போராடி மேலே வந்து கரை சேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.