கார் மோகம்: அமெரிக்க சாலையில் வேகம் காட்டிய 5 வயது சிறுவன்- துரத்திப் பிடித்த போலீசார்!

கார் மோகம்: அமெரிக்க சாலையில் வேகம் காட்டிய 5 வயது சிறுவன்- துரத்திப் பிடித்த போலீசார்!
கார் மோகம்: அமெரிக்க சாலையில் வேகம் காட்டிய 5 வயது சிறுவன்- துரத்திப் பிடித்த போலீசார்!
Published on

பெற்றோரின் காரை இயக்கிச் சென்ற 5 வயது சிறுவன் அமெரிக்க காவல் துறையிடம் சிக்கினான்.

 அமெரிக்காவின் உட்டா மாகாண காவல்துறையினர் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு கார் மட்டும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த காவல்துறையினர், வாகனத்தை மறித்தனர். அப்போது அந்த காரை 5 வயது சிறுவன் தனியாக இயக்கி வந்தது தெரியவந்தது. அந்த சிறுவனை பிடித்த காவல்துறையினர் அவனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த சிறுவன், தனக்காக ஒரு விலை உயர்ந்த சொகுசு காரான லம்போகினி மாடல் காரை வாங்க கலிபோர்னியாவுக்கு சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அந்த சிறுவனிடம் நடத்திய சோதனையில் அவனிடம், இந்திய மதிப்பில் 220 ரூபாய் மட்டுமே பணம் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக சிறுவனின் பெற்றோரை வரவழைத்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். சிறுவன் ஓட்டிவந்த கார், அவரது பெற்றோர்களுடையது என்பதும், தொலைக்காட்சியை பார்த்து கார் ஓட்ட கற்றுக்கொண்டதாக சிறுவன் கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com