இலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு!

இலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு!
இலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு!
Published on

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 102 ஆக ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக் கும் என்று அஞ்சப்படுகிறது. 

ஈஸ்டர் தினமாக இன்று இலங்கையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்வதவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. நான்கு தேவாலயங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.

கொச்சிக்கடை தேவாலயம், கட்டுவப்பிட்டிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இதில், பிரார்த்தனையில் ஈடுபட் டிருந்த ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுதவிர ஷாங்ரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 102 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களில் கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது. இந்த தொடர் குண்டுவெடிப்பு அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com