அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உள்ள பள்ளிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்.
இதில், 4 பேர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதான நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய காவல்துறையினர், சம்பவம் நடத்த இடத்தில் எஃப்.பி.ஐ. மற்றும் ஏ.டி.எப். அமைப்பினர் சோதனை நடத்தியதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச்சூடு குறித்த செய்தி அறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி வளாகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.