‘உண்மையான நண்பனை ஆபத்தில் அறி’ என்பார்கள். அது போல பிரேசில் நாட்டில் மூன்று வயதேயான சிறுவன் ஒருவன் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கிய தனது நண்பனைக் காப்பாற்றியதை அடுத்து அவனது துணிச்சலை பாராட்டி காவல்துறையினர் வீரதீர செயலுக்கான விருதை வழங்கியுள்ளனர்.
சிசிடிவி கேமராவில் கிடைத்த காட்சிகளை சிறுவனின் தாய் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து "எனது மகன் ஆர்தர் டி ஒலிவேராவின் தைரியமான, விரைவான மற்றும் அன்பான அணுகுமுறையைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/poliana.consoledeoliveira/videos/3888047744555071/
அந்த காட்சியில் நீச்சல் குளத்தின் அருகே சிறுவன் ஆர்தர் டி ஒலிவேராவும், அவரது நண்பர் ஹென்ரிக்கும் நின்று கொண்டிருக்கின்றனர்.
திடீரென பேலன்ஸை இழந்து நீச்சல் குளத்தில் விழுந்த ஹென்ரிக் தத்தளிப்பதை பார்த்ததும் ஆர்தர் உதவிக்காக பக்கத்தில் யாரேனும் உள்ளார்களா என சுற்றிப் பார்க்கிறார்.
பெரியவர்கள் அங்கு யாரும் இல்லை என்பதை உணர்ந்த ஆர்தர், ஹென்ரிக்கை காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்து அவரை மீட்டுள்ளார்.