இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் வசம் வந்துள்ள அல்-ஷிபா மருத்துவமனையில் இருந்து மொத்தம் 31 குறைமாதக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், அதில் 3 குழந்தைகளுக்கு தெற்கு காஸாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. மீதமுள்ள 28 குழந்தைகள் எகிப்திற்கு அனுப்பபட்டதாகவும், அவர்களில் 12 குழந்தைகள் விமானம் மூலம் கெய்ரோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்புக் கூறியுள்ளது.
பிற குழந்தைகள் அல்-அரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே அல்-ஷிபா மருத்துவமனையில் மிக மோசமான காயங்கள் மற்றும் உடல்நலக் குறைவுடன் 250க்கும் மேற்பட்டோர் உள்ளதாக ஹமாஸின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.