சீனா | சாப்பிடுவதில் ஆபத்தான Bet... லைவ் வீடியோவின்போது Mukbang Youtuber உயிரிழந்த பரிதாபம்!

சீனாவில் முக்பாங் (உணவு சாப்பிடுவதை வீடியோவாக பதிவுசெய்யும் கலாசாரம் Mukbang எனப்படும்) லைவ் வீடியோ ஒன்றில் அளவிற்கு அதிகமாக சாப்பிட்டு காண்பிக்கிறேன் என சவால் விட்டு, அதிகமாக உணவருந்திய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Pan Xiaoting
Pan Xiaotingமுகநூல்
Published on

பொதுவாக, மனிதர்களை அதிகம் கவர்வது சமூக வலைதளங்கள்தான். அதிலும், யூட்டியூப் போன்றவற்றில் தனி கணக்குகளை உருவாக்கி, பணம் சம்பாதிப்பவர்கள் ஏராளாம். இந்த வகையில் பிரபல யூட்டியூபர் ஒருவர், லைக்ஸ் மற்றும் வியூஸ்க்கு ஆசைப்பட்டு அதிக அளவு உணவு உண்டு தன் உயிரை பறிகொடுத்திருக்கிறார். சீனாவில் நடந்த இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Pan Xiaoting.
Pan Xiaoting.

சீனாவை சேர்ந்த இளம்பெண் Pan Xiaoting (24). யூட்டியூபரான இவர், தான் உணவு சாப்பிடும் வீடியோக்களை தனது யூட்டியூப் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். இது முக்பாங் எனப்படும். ASMR என சொல்லப்படும் இவ்வகை வீடியோக்கள், பார்ப்பவர்களுக்கு மன திருப்தியை கொடுப்பதாக அறியப்படுகிறது. ஆனால் கேமரா முன் இருப்பவருக்கு கெடுதலையே கொடுக்கிறது.

இவ்வகை யூட்யூபர்கள் கேமரா முன் அமர்ந்து வயிறு திகட்டும் அளவுக்கு சாப்பிடுவர். அப்படி அதிக அளவு உணவை உண்ணும் வீடியோக்களை வெளியிட்டு, ஃபாலோவர்ஸ் மற்றும் வியூஸை பெறுவர். இப்படியான முக்பாங் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட Xiaoting, தானும் அப்படியான ஒரு யூட்யூபராக மாறியுள்ளார்.

இதனால், தனது யூட்டியூப் பக்கத்தில் முக்பாங் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் எதிர்பார்த்ததை போலவே அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருப்பினும் அதைக்கண்ட இவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ‘இப்படி அதிக அளவு உணவு உண்பதை தயவுசெய்து கைவிடு’ என எச்சரித்துள்ளனர். ஆனால், இவர் கேட்கவில்லை.

இந்தவகையில் கடந்த ஜூலை 14 ஆம் நாள், புதிதாக ஒரு வீடியோவுக்காக புதிதாக ஒரு முக்பாங் சவாலை முன்னெடுத்துள்ளார். அதில் இவர், கிட்டதட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக உணவை உட்கொண்டுள்ளார். இதனால், ஒரு கட்டத்தில் நிலைதடுமாறிய அவர் மரணமடைந்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “அதிக அளவு உணவு உண்டதே இவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருக்கலாம்” என்று சந்தேகித்துள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில், இவரின் வயிறு கடுமையாக சிதைவடைந்தும், இவர் சாப்பிட்ட உணவுகள் அனைத்தும் வயிற்றில் செரிமானம் ஆகாமல் நிரம்பியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், சீன ஊடகம் ஒன்றின்படி, இவர் ஒருவேலைக்கு சுமார் 10 கிலோ எடையுள்ள உணவை உண்பாராம். தொடர்ச்சியான இந்தப் பழக்கங்களே Xiaoting மரணத்துக்கு காரணமென சொல்லப்படுகிறது.

Pan Xiaoting
வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு: இயல்பு நிலையை அடைந்ததா வங்கதேசம்?

முக்பாங் வீடியோக்கள் செய்யும் யூட்டியூபர்களை பொறுத்தவரை உணவு விடுதிகளுக்கு சென்று, அதிக அளவு உணவுகளை ஆர்டர் செய்து, தாங்கள் சாப்பிடுவதை லைவ் ஸ்டீரிமிங்கில் பார்வையாளர்களுக்கு காண்பிப்பர். இப்படியானவர்கள் குறித்த ஆய்வு ஒன்றில், “மற்ற உணவு உண்ணும் யூட்டியூபுகளை காட்டிலும் இந்த முக்பாங்க் எனப்படும் அதிக அளவு உணவு உண்ணும் வீடியோக்களுக்கு அதிக வியூஸ் கிடைக்கிறது. குறிப்பாக இதற்கு பெண்கள், குழந்தைகள் அதிக பார்வையாளர்களாக இருக்கிறார்கள்” என்று தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com