15வது நாளாக தொடரும் தாக்குதல்.. 20 லாரிகளில் காசாவுக்குள் நுழைந்த நிவாராணப் பொருட்கள்!

காசாவுக்குள் எதுவும் நுழையாது என்று இஸ்ரேல் தடை வித்த நிலையில் தங்களின் அடிப்படை தேவைகளை கூட பெறமுடியாமல் தவித்த காசா மக்களுக்கு முதற்கட்டமாக 20 லாரிகளில் உணவு, மருந்துகள் போன்றவை அனுப்பப்பட்டுள்ளது.
நிவாராணப் பொருட்கள்
நிவாராணப் பொருட்கள்முகநூல்
Published on

காசாவுக்கும் எதுவும் நுழையாது என்று இஸ்ரேல் தடை வித்த நிலையில் தங்களின் அடிப்படை தேவைகளை கூட பெறமுடியாமல் தவித்த காசா மக்களுக்கு முதற்கட்டமாக 20 லாரிகளில் உணவு, மருந்துகள் போன்றவை அனுப்பப்பட்டுள்ளது.

15வது நாளாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ்க்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து அப்பாவி மக்களை இதற்கு பலியாக கொடுத்து அடிப்படை தேவையான குடிநீர், மின்சாரம், எரிபொருள் என்று அனைத்து வசதிகளையும் இழந்து தவிக்கும் நிலையும் மற்றொரு புறம் போரின் தீவிரம் காட்டு தீயை போல இன்னும் வேகம் எடுத்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் எகிப்தின் ரஃபா எல்லை பகுதியில் இருந்து பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்குள் நேற்று அதாவது சனிக்கிழமை 20 லாரிகளில் நிவாரணப் பொருட்களானது அனுப்பப்பட்டது.

நிவாராணப் பொருட்கள்
நிவாராணப் பொருட்கள்முகநூல்

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சிறைப்பிடித்த இஸ்ரேலியர்களை விடுவிக்கும் வரை காசாவுக்குள் எதுவும் நுழையாது என்று இஸ்ரேல் தெரிவித்து இருந்தது.

இதனால் கடந்த 9 ஆம் தேதியில் இருந்து காசா பகுதிக்கு குடிநீர், எரிபொருள், மின்சாரம் என்று அனைத்தும் தடைசெய்ய இஸ்ரேல் அரசாங்கம் உத்தரவிட்டது. இதன் விளைவாக அடிப்படை தேவைகளை இழந்து பாலஸ்தீனர்களில் பாதிபேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறவும் ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சீனா, சவுதி அரேபியா, கத்தார், ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் தொண்டு அமைப்புகள் இணைந்து காசாவுக்கு தேவையான நிவாரண பொருட்கள் எகிப்தின் அல் ஆர்ஷ் விமான நிலையத்தின் மூலம் சரக்கு விமானங்களை கொண்டு எடுத்து செல்லப்பட்டது.

நிவாராணப் பொருட்கள்
நிவாராணப் பொருட்கள்முகநூல்

இதில் 3000 டன் நிவாரணப் பொருட்களானது சுமார் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து போர் நடந்து தாக்குதல் ஏற்பட்டு கொண்டு இருந்ததன் விளைவாக முதற்கட்டமாக 20 லாரிகள் மட்டுமே ரஃபா எல்லைகுள் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த அனுமதி கிடத்ததற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முக்கிய காரணம் என்று கூறலாம்.

கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களின் 4 லாரிகளில் மருந்து பொருட்களும், மீதமுள்ளவற்றில் உணவு பொருட்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 23 லட்சம் காசா மக்களுக்கு இவை போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஐ.நாவின் பொது செயலாளர் குத்தேரஸ் எகிப்தின் ரஃபா எல்லைக்கு வெள்ளிக்கிழமை சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நிவாராணப் பொருட்கள்
”போர் முடியும்வரை இஸ்ரேல் போலீசாருக்கான சீருடையை தைக்க மாட்டோம்”- கேரள நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

காசாவிவுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லர் அமைப்பினரும் இஸ்ரேயலின் வடக்கு எல்லை பகுதியை குறிவைத்து தொடர் தாக்குதல்களையுல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்படி மாறி மாறி நடத்தப்பட்டு வரும் தொடர்தாக்குதலுக்கு பாதிக்கப்படுவதும் பலியாவதும் அங்கு வாழும் அப்பாவி மக்கள் தான் என்று சிந்திக்காமல் இப்பேரழிவை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com