இந்திய மாலுமிகள் சென்ற இரண்டு கப்பல்களில் நடுக்கடலில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு கப்பல் களிலும் 15 இந்திய மாலுமிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
தான்சானியாவை சேர்ந்த கேன்டி, மேஸ்ட்ரோ என்ற இரண்டு கப்பல்கள், ரஷ்யா-உக்ரைன் கடல் பகுதியில் கெர்ச் ஜலசந்தியில் சென்றுகொண்டி ருந்தன. ஒரு கப்பல் சமையல் எரிவாயுவையும் மற்றொரு கப்பல் எண்ணெய்யையும் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன. இரண்டு கப்பல்களும் நடுக் கடலில் எரிபொருளை மாற்றும்போது திடீரென்று ஒரு கப்பலில் தீப்பற்றியது.
இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் கப்பலில் இருந்த மாலுமிகள் சிலர் கடலுக்குள் குதித்து உயிர் தப்பினர். சிலர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களை மீட்கும் பணியில் ரஷ்ய கடற்படை ஈடுபட்டுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 பேரை கடலில் இருந்து மீட்டுள்ளதாகவும் சிலரை பேரை காணவில்லை என்றும் ரஷ்ய கடற்படை தெரி வித்துள்ளது.
கேன்டி, கப்பலில் 17 பணியாளர்கள் பயணித்துள்ளனர். இதில் 9 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள். 8 பேர் இந்தியர்கள். மேஸ்ட்ரோ கப்பலில் துருக் கி, இந்தியாவை சேர்ந்தவர்கள் தலா ஏழு பேரும் லிபியாவை சேர்ந்த ஒருவரும் இருந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.