இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அமைச்சர் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் மார்சி பெய்ன், பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ஆகியோரும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தான் விவகாரம், பயங்கரவாத ஒழிப்பு, சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், எவ்வித சமரசமும் இன்றி பயங்கரவாதத்தை ஒழித்து கட்ட வேண்டிய தருணம் இது என்றார். ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்த ஜெய்சங்கர், இரு நாடுகளும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.