பாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 17 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 17 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 17 பேர் உயிரிழப்பு
Published on

பாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் ராணுவ வீரர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய பயற்சி விமானம் ஒன்று ராவல்பிண்டியில் வழக்கம் போல பயிற்சியில் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதன் புறநகர் பகுதியான மோரா கலு என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 5 ராணுவ வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். 

விமானம் விழுந்து தீப்பிடித்ததில் வீடுகள் புகைமண்டலமாகக் காட்சியளித்தன. இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. படுகாயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com