அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 இந்திய புராதன சின்னங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 இந்திய புராதன சின்னங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு
அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 இந்திய புராதன சின்னங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு
Published on

அமெரிக்காவில் மீட்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட இந்திய புராதன சின்னங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன. பழங்கால சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்காவிற்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருட்டு, சட்டவிரோத வர்த்தகம், கலாசார பொருட்களின் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உறுதி பூண்டுள்ளனர். அதன்படி, இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திவரப்பட்ட கலைநயமிக்க 157 வகையான புராதனப் பொருட்கள் மீட்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்று காலை நாடு திரும்பும் பிரதமர் அந்தப் பொருட்களை விமானத்தில் கொண்டு வருகிறார். பிரதமர் மீட்டுக் கொண்டுவரும் கலைப் பொருட்களில் பாதி கலாசாரம் சம்பந்தப்பட்டவை ஆகும். எஞ்சிய பாதி இந்து மதம், பௌத்த மதம் மற்றும் சமண மதம் தொடர்பான சிலைகளாகும். இதில் லட்சுமி நாராயணன், புத்தர், விஷ்ணு, சிவன் பார்வதி உள்ளிட்ட சிலைகள் அடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com