15 வயது இந்திய வழிச்சிறுவன் தனிஷ்க் ஆப்ரகாம். இவரது பெற்றோர்கள் கேரளாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். சிறுவயது முதலே படிப்பிலும், அறிவியலிலும் தனிஷ்க் சிறந்து விளங்கியுள்ளர் இந்தச் சிறுவர். இவர் பையோமெடிகல் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனிஷ்க் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். அத்துடன் தற்போது பிஹெச்டி படிப்பையும் தொடங்கியுள்ளார்.
7 வயதாக இருக்கும் போது தனிஷ்க் ஒரு இயந்திரம் கண்டுபிடித்தார். அந்த இயந்திரம் மூலம் தீக்காயம் பட்ட நோயாளிகளை தொடாமலே, அவர்களின் இதயத்துடிப்பை கணக்கிட முடியும். அத்துடன் இவர் வானியல் தொடர்பாக எழுதிய கட்டுரை ஒன்று, நாசா இணையத்தில் பதிவிடப்பட்டது. அத்துடன் நாசாவில் இவர் உரையாற்றியும் உள்ளார். இந்தச் சிறுவயதிலேயே இத்தனை அறிவு கொண்டவர் என்பதால், அமெரிக்க நிபுணர்கள் இந்த சிறுவனைக் கண்டு ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
தனது அறிவியல் பயணம் மற்றும் படிப்பு தொடர்பாக தனிஷ்க் பேசும் போது, “எனது சாதனைகளை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளேன். எல்லோருக்கும் தனது வாழ்வில் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். எனக்கும் அது கட்டாயம் உள்ளது. கேன்சர் நோய்க்கு புதிய மருத்துவமுறையை கண்டயறிய வேண்டும் என்பதே எனது கனவு. மேலும் மேம்பட்ட ஒரு சிகிச்சை முறையை கேன்சருக்கு கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தார்.