பாகிஸ்தானில் சென்றுகொண்டிருந்த பேருந்தை நிறுத்திய பயங்கரவாதிகள், பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லை அருகே அமைந்துள்ள மாகாணம் பலூசிஸ்தான். இங்குள்ள ஓர்மாரா என்ற கடலோர பகுதியில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் பேருந்து வந்துகொண்டிருந்தது. மக்ரான் என்ற கடலோர தேசிய நெடுஞ்சாலை யில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, துணை ராணுவப்படை உடையணிந்த சிலர் அதை நிறுத்தினர். பேருந்தில் இருந்தவர்களை கீழே இறங்குமாறு கூறி ய அவர்கள், துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் 14 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர். பின்னர் அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.
இந்தக் கொடூர சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில் லை. கடந்த சில நாட்களுக்கு முன் பலூசிஸ்தான் மாகாணத்தில் தலைநகர் குவெட்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.