பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
1 எம்டிபி எனப்படும் மலேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 4200 கோடி ரூபாய் (267 கோடி மலேசிய ரிங்கிட்) தொகையை ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப். மேலும் பல்வேறு முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நஜீப், 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து விசாரணை நடந்துவந்த நிலையில் இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பேசிய நீதிபதி “ இந்த வழக்கின் விசாரணையில் ஆதாரங்கள் அனைத்தையும் விசாரித்தபின், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார். நஜீப் ரசாக் பேசுகையில் “ இது முடிவு அல்ல, மேல்முறையீடு உள்ளது. அதில் நிச்சயமாக நாங்கள் வெற்றிபெறுவோம்” என்றார்