ஸ்பெயின் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நூற்றுக்கும் அதிகமான பூனைகளை வளர்ந்துவந்தவரை விலங்கு பாதுகாப்பு தொண்டு நிறுவனம் பூனைகளுடன் சேர்த்து வெளியேற்றியுள்ளது.
தெற்கு ஸ்பெயினில் வலேன்சியா பகுதியில் கான்டியா நகரில் வசித்துவந்த ஸ்பாமா சஃபோர் என்பவரிடம் இருந்து 110 பூனைகளும் கைப்பற்றப்பட்டு, நோய் எதிர்ப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன. அவரை ஆயிரம் சதுர அடி வீட்டிலிருந்து வெளியேற்றியதும் அங்கிருந்த பூனைகள் ஆதரவற்றைவையாகிவிட்டன. உடனே அந்தப் பூனைகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு வந்த ஒரு பூனை ஜோடியின் மூலம் 110 பூனைகள் பெருகியுள்ளதாக விலங்கு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அத்தனை பூனைகளுக்கும் உடனடியாக அடைக்கலம் கொடுக்கமுடியவில்லை.