ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டு இருப்பர் என்ற பழமொழி இந்த காலத்திற்கு செல்லாது. கையடக்க கணினியில் உலகம் ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு உபாதையை சொல்லும், அதன் வழி சென்றால் ஏமாற்று பேர்வழிகள் அகப்பட்டுகொள்வர்.
அமெரிக்காவில் ஒரு பெண் 6 டாலர் கொண்ட சாண்ட்விச்சை 1000 டாலர் கொடுத்து ஏமாந்துள்ளார். இதற்கு அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அல்லது வங்கிகள் மூலம் பணத்தை திருப்பி தரலாம் என்றும் அமெரிக்காவின் நுகர்வோர் விசாரணை இயக்குனர் அப்பெண்ணிற்கு யோசனை தெரிவித்துள்ளது. நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
அமெரிக்காவில் ஓஹியோவில் subway என்ற பெயரில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பிஷப் என்ற பெண் தனக்கும் தனது குடும்பத்தினருக்குமாக சேர்ந்து மூன்று சாண்ட்விச்களை ஆர்டர் செய்துள்ளார். சாதாரணமாக ஒரு சாண்ட்வெஜ் 6.50 டாலர் முதல் 12 டாலர்வரை விற்கப்படும் இடத்தில் சாண்ட்விச்சின் விலையானது 1021 என்று மூன்று சாண்ட்வெஜ்குக்கு அந்த நிறுவனமானது இவரது கணக்கிலிருந்து வரவு வைத்துக் கொண்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிஷப், நேராக தான் வாங்கிய உணவகத்திற்கு சென்று, தனது பணத்திற்கான காரணத்தை கேட்டு இருக்கிறார்.
அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சப்வேவ் கார்ப்பரேட் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளது. சப்வேவ் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு நேரடியாக பேச தொலைபேசி எண்ணையும் ஊழியர்கள் சரிவர தரவில்லை.
இந்நிலையில் இரண்டு மாதங்களாகியும், உணவகம் பிஷபிற்கு எந்த பதிலும் தராததால், நேரடியாக மீண்டும் உணவகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் இச்சமயம் அவ்வுணவகமானது அங்கு இல்லை. தான் ஏமாற்றப்பட்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிஷப் இது குறித்து தனது வளைபக்கத்தில் எழுதியுள்ளார். மேலும் இதனால் தான் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும், இதனால் மளிகைப்பொருட்களை கூட வாங்குவதற்கு தயங்குவதாகவும் கூறியிருக்கிறார்.
இவரது இப்பதிவுக்கு பதிலளித்த the better business bureau,வின் நுகர்வோர் உறவுகள் மற்றும் விசாரணைகளின் இயக்குனர் லீ அன்னே லானிகன், பிஷப்பிற்கு நடந்ததை சுட்டிக்காடி, சப்வே உணவகத்தின் இச்செயல் ஒரு திருட்டு என்று கருதலாம் ,
இதுகுறித்து பிஷப் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும், இல்லையென்றால் பிஷப் இது குறித்து தனது வங்கியிடம் சென்று உணவகத்தில் செலுத்திய பணத்தை மறுபடியும் பெற்றுதருமாறு கேட்கலாம், இல்லையென்றால் மோசடிப் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யலாம். அல்லது குரோம்வெல் கனெக்டிகட் பிசினஸ் பீரோவில் புகார் செய்யலாம், என்று யோசனை தெரிவித்து இருந்தார் என்று விவரம் தெரியவந்துள்ளது.