ஏமனில் உள்ள தடுப்பு முகாம் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்களான ஹவுத்தி இயக்கத்தின் கோட்டையாக கருதப்படும் சதா என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலை அடுத்து, வான்வழித் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக, சவுதி கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளன.
தடுப்பு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், நூறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது சரிவரத் தெரியவில்லை என்றபோதிலும், 70க்கும் மேற்பட்ட உடல்கள் இதுவரை இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.