சோமாலியா: திறந்தவெளி உணவகத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - 10 பேர் பலி

சோமாலியா: திறந்தவெளி உணவகத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - 10 பேர் பலி
சோமாலியா: திறந்தவெளி உணவகத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - 10 பேர் பலி
Published on

சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சோமாலியாவின் ஹிரான் மாகாணத்தில் உள்ளது பெலட்வெய்னே நகரம். இங்குள்ள ஹாசன்திஃப் என்ற பிரபலமான திறந்தவெளி உணவகத்தில் இன்று மதியம் வழக்கம் போல அதிக அளவிலான மக்கள் உணவருந்த வந்திருந்தனர். இந்நிலையில், 2.30 மணியளவில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த 5 அரசு ஊழியர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்பு தாக்குதலில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இது தற்கொலை தாக்குதல் என்பது தெரியவந்திருக்கிறது. எனினும், இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சோமாலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவதை கண்டித்து, பல கிளர்ச்சி அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com