கொரோனாவால் பாதித்தவர்களை தங்க வைத்திருந்த ஹோட்டலில் திடீர் விபத்து: 10 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் பாதித்தவர்களை தங்க வைத்திருந்த ஹோட்டலில் திடீர் விபத்து: 10 பேர் உயிரிழப்பு
கொரோனாவால் பாதித்தவர்களை தங்க வைத்திருந்த ஹோட்டலில் திடீர் விபத்து: 10 பேர் உயிரிழப்பு
Published on

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை தனிமைப்படுத்தி தங்க வைத்திருந்த ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சீனாவை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் முதன்முதலாக சீனாவில் உள்ள வுஹான் பகுதியில் இருந்துதான் தொடங்கியது. இதுவரை சீனாவில் இந்தத் தொற்றால் 80 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,097 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 55 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரம் பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பிற நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தப்படியாக தென் கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா. தென் கொரியாவில் 7,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 4,747 பேருக்கு வைரஸ் தொற்று உள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 5,636 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 233 பேர் வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு சீனா பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில், பலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த ஹோட்டல் திடீரென்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆறு மாடி கொண்ட சின்ஜியா ஹோட்டலில் சில புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஹோட்டலில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு படையினர் மிக கடுமையாக போராடி வருகின்றனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 37 பேர் உயிருடன் சிக்கிக் கொண்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் சார்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 ஆம்புலன்ஸ்கள், 800-க்கும் அதிமான கமாண்டோக்கள், 750 மருத்துவ ஊழியர்கள் என பெரிய அணியே மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தக் கட்டடம் இடிந்து விழுந்த நேரத்தில் ஒன்பது பேர் அவர்களாகவே ஹோட்டலில் இருந்து தப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் உரிமையாளர் காவல்துறையினரால் வரவழைக்கப்பட்டுள்ளார். சரிவுக்கு காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com