இலங்கையில் இன்று முதல் தொடர்ச்சியாக 10 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு நாளுக்கு நாள் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாக, மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க மின்சாரத்துறை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்காரணமாக, 6மணி முதல் 8 மணி நேரம் வரை அமல்படுத்தப்பட்டு வந்த மின்வெட்டு 10மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள், விவசாயம் சார்ந்த பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் பல இன்னல்களை அனுபவித்து வரும் இலங்கை மக்களுக்கு 10 மணி நேர மின்வெட்டு என்ற அறிவிப்பு இருள் சூழந்த வாழ்க்கைக்கு தள்ளி உள்ளது